கோவா விமான நிலையத்தில் போர் விமானம் தீ பிடித்து விபத்து

கோவா விமான நிலையத்தில் போர் விமானம் தீ பிடித்து விபத்து

கோவா: கோவா விமான நிலையத்தில் எம்ஐஜி-29கே ரக போர் விமானம் திடீரென தீ பிடித்து விபதுக்குள்ளானதால் அங்கு விமான போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிப்படைந்தது.

கோவா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட எம்ஐஜி-29கே ரக போர் விமானம் ஓடு பாதையில் இருந்து விலகி ஓடியதால் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை இயக்கிய பயிற்சி விமானி விமானத்தில் இருந்து குதித்து பத்திரமாக வெளியேறியதால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். விமானம் தீ பிடித்து விபத்துக்குள்ளானதால் கோவா விமான நிலையத்தில் சில மணி நேரங்கள் விமான போக்குவரத்து பாதிப்படைந்தது. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. தீயனைப்பு வீரர்களின் தொடர் முயற்சியால் விமானத்தில் பிடித்த தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின், விமான போக்குவரத்து சீரானது.


இந்திய கடற்படைக்காக முதன்முதலாக முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில் இருந்து இயக்கப்படும் எம்ஐஜி-29 ரக போர் விமானத்தை, இந்திய கடற்படை முதன்முதலாக இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MiG 29K aircraft aircraft goa fighter jet airport goa airport fire எம்ஐஜி 29கே போர் விமானம் கோவா கோவா விமான நிலையம்
இந்தியா

Leave a comment

Comments