காளி கோயிலில் பூஜை செய்ய முஸ்லீம் மதத்தை சேர்ந்தவருக்கு அனுமதி மறுப்பு; மனைவியின் இறுதி ஆசையை செய்ய முடியாமல் தவித்த கணவர்!

காளி கோயிலில் பூஜை செய்ய முஸ்லீம் மதத்தை சேர்ந்தவருக்கு அனுமதி மறுப்பு; மனைவியின் இறுதி ஆசையை செய்ய முடியாமல் தவித்த கணவர்!

புதுடெல்லி: மனைவியின் ஆசைப்படி காளி கோயிலில் பூஜை செய்ய, முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் இம்தியாஸூர் ரஹ்மான். மேற்கு வங்க வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணியாற்றுகிறார். இவர் மனைவி நிவேதிதா கடாக். 20 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இஹினி அம்ப்ரீன் என்ற மகள் உள்ளார். திருமணத்துக்குப் பிறகும் நிவேதிதா மதம் மாறாமல் இந்து மதத்தையே பின்பற்றி வந்துள்ளார். சமீபத்தில் உடல் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் கடந்த வாரம் நிவேதிதா உயிரிழந்தார். இதையடுத்து டெல்லியில் இந்து முறைப்படி அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால், இறந்தவர்களுக்கு செய்யப்படும் சடங்குகளை செய்ய வில்லை. 

இதையடுத்து அங்குள்ள  காளி கோயிலில்,தனது மகளின் பெயரில் சிறப்பு பூஜைக்கு அனுமதி கேட்டிருந்தார் ரஹ்மான். பூஜை கட்டணமாக 1,300 ரூபாயும் செலுத்தியிருந்தார். அருக்கு கடந்த 6-ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அன்று மகளுடன் சென்ற அவரை கோயிலுக்குள் விடவில்லை. பெயரை கேட்டதும் பூஜைக்கான அனுமதியை ரத்து செய்துவிட்டனர்.இதுபற்றி கோயில் நிர்வாகி  அஷிதவா போவ்மிக் கூறும்போது, ‘ரஹ்மான் தனது அடையாளத்தை மறுத்து மகளின் பெயரில் அனுமதி கேட்டிருந்தார். அவரது குலம், கோத்ரம் பற்றி கேட்டபோது, அவரால் பதில் சொல்ல முடியவில்லை. முஸ்லீம்கள் குலம், கோத்ரம் பின்பற்றுவதில்லை. அதோடு, அந்தப் பெண் எப்போது முஸ்லீமை திருமணம் செய்துகொண்டாரோ, அப்போதே அவர் இந்து மதத்தில் இருந்து விலகிச் சென்று விட்டார்’ என்று தெரிவித்துள்ளார்.Hindu wife Muslim man Muslim man’s struggle dead Hindu wife இம்தியாஸூர் ரஹ்மான் நிவேதிதா கடாக் முஸ்லீம்
இந்தியா

Leave a comment

Comments