ஆடி அமாவாசை விரதம் : முன்னோர்களின் ஆசியைபெரும் விரதம்

ஆடி அமாவாசை விரதம் : முன்னோர்களின் ஆசியைபெரும் விரதம்

ஆடி அமாவாசை விரதம்: முன்னோர்களின் ஆசியை வழங்கும் ஆடி அமாவாசை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாகும்.மறைந்த முன்னோர்களின் ஆசி நமக்கு என்றென்றும் தேவை என்பது ஐதீகம். அதனால் தான் முன்னோர்களை திருப்தி செய்ய ஒவ்வொரு அமாவாசை அன்றும் தர்ப்பணமும் அவர்களின் இறந்த தினத்தன்று திதி கொடுப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் இதற்கு சிறப்பு வாய்ந்தது என்றாலும், ஆடி அமாவாசை கொஞ்சம் அதீத முக்கியத்துவத்தை பெற்றுத் திகழ்கிறது.

அன்றைய தினம் முன்னோர்களையும், தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுத்து, புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபட்டு சிறப்பு பூஜைகள்செய்ய வேண்டும்.ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தேவர்களும் அமாவாசையின் அதிபர்களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக்கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாளாக கருதப்படுகின்றது .

எந்த நிலை வந்தாலும், எந்தச் சூழல் ஏற்பட்டாலும் தர்ப்பண காரியங்களை சிரத்தையுடன் செய்யச் செய்ய. அவை பன்மடங்கு பலனாக நம் பிள்ளைகளுக்குப் போய்ச்சேரும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை . மாதந்தோறும் அமாவாசை நாளிலும் விரதமிருந்து தர்ப்பணம் செய்து, பித்ருக்களை ஆராதிக்க வேண்டும் என்கிறது நமது தர்மசாஸ்திரம். 

ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இலை போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்களை படைத்து துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும்.ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காசி (கயை) - முக்தி தரும் ஸ்தலம் என்று போற்றப்படும் காசி முன்னோர்களுக்கு தர்ப்பணம்(நீத்தார் கடன்) செய்வதற்கு மிக முக்கியமான இடங்களுள் ஒன்று. ராமேஸ்வரம் - ராமரும் அவரது மனைவி சீதாவும், மற்றும் சகோதரன் லட்சுமணனும் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபாடு செய்த இந்த புனிதமான தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் மூதாதையர்களின் ஆன்மாக்களுக்கான பாதையில் இருக்கும் தடைகள் நீங்கி அவர்கள் முக்தி பெற உதவுகின்றது.

திலதர்ப்பணபுரி  ராமன் தனது தந்தையாகிய தசரதருக்கு இங்கு தர்ப்பணம் செய்தார். எனவே இந்த இடம் முக்தி ஷேத்திரம் என்று அழைக்கபடுகிறது.ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம்.


#ஆடிஅமாவாசை  #Aadiamavasai  #தர்ப்பணம்

ஆடி அமாவாசை தர்ப்பணம் இஷ்டதெய்வ வழிபாடு பித்ருக்கள் முக்தி ஷேத்திரம் Rameswaram Ramanathaswamy Aadi amavasai
ஆன்மிகம்

Leave a comment

Comments