நேரு பற்றி தவறாக பேசியதற்கு தலாய்லாமா மன்னிப்பு கோரினார்?

நேரு பற்றி தவறாக பேசியதற்கு தலாய்லாமா மன்னிப்பு கோரினார்?

கோவா: நேரு பற்றி தவறாக பேசியதற்கு திபெத்திய தலைவர் தலாய்லாமா மன்னிப்பு கோரினார்.

கோவா மாநில மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட திபெத்திய தலைவர் தலாய்லாமா மாணவர்களிடம் உரையாற்றினார். இதில் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் பதவியினை ஜவர்கலால் நேரு அவர்களுக்கு அளிக்காமல் முகமது அலி ஜின்னாவிற்கு, மகாத்மா காந்தி அளித்திருந்தால் இந்தியா - பாகிஸ்தான் பிரிந்து இருக்காது என தெரிவித்தார்.

மேலும் அவர், அப்போதைய காலக்கட்டத்தில் ஜின்னாவிற்கு பிரதமர் பதவியினை வழங்கவே காந்தி விரும்பினார். ஆனால் நேரு இந்த விஷயத்தில் தலையிட்டு பிரதமராக பதவியேற்றார். மகாத்மா காந்தியின் ஆசை நிறைவேறியிருந்தால், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே இருந்திருக்கும். நேருவை எனக்கு நன்றாகவே தெரியும், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஆனால் சில தவறுகளும் நடந்துள்ளது என தெரிவித்தார். 


தலாய்லாமா கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் மன்னிப்பு கோரியுள்ளார். என் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, நான் தவறாக எதுவும் பேசியிருந்தால் மன்னிகவும் என தெரிவித்திருக்கிறார்.தலாய்லாமா திபெத் நேரு முகமது அலி ஜின்னா Nehru Dalai lama Tibet
இந்தியா

Leave a comment

Comments