திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி? ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்; அழகிரியின் ரியாக்க்ஷன் என்ன?

திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி? ஸ்டாலினின் மாஸ்டர் பிளான்; அழகிரியின் ரியாக்க்ஷன் என்ன?

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் அவருக்கு  அடுத்து உதயநிதி ஸ்டாலின்  களமிறங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால்  மரணமடைந்ததைத் தொடர்ந்து அவரது உடல் நேற்று காலை முதல் ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு  ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ அவரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில்  அடக்கம் செய்யப்பட்டது. தனது 33 வயதில் முதன் முதலாகச் சட்டப்பேரவை உறுப்பினரான கருணாநிதி சட்டப்பேரவை தேர்தல்களில் 13 முறை களம் கண்டு, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை. 1957-ஆம் ஆண்டிலிருந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி.இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினர் யாராவது மறைந்தால், அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வேண்டும். இதையடுத்து, திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்க இருக்கிறது. அதே சமயம் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சில நாட்களுக்கு முன்பு காலமானார்.அதனால், இந்த இரு தொகுதிக்கும் தேர்தல் ஒரே நேரத்தில் நடக்க வாய்ப்புள்ளது.இது ஒருபுறமிருக்க  கருணாநிதி மறைவையடுத்து  அவர் உறுப்பினராக இருந்த திருவாரூர் தொகுதியில், அவரது பேரனான  உதயநிதி ஸ்டாலினை இடைத்தேர்தலில் களமிறக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே, உதயநிதி கட்சி பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில் அவரைத் திருவாரூரில்  களமிறக்கத் திட்டமிட்டுள்ள ஸ்டாலின் அதற்கான பணிகளை அன்பில் மகேஷ் மூலம் செய்து வருவதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே தன்  மகன் துரை தயாநிதிக்கு கட்சியில் பொறுப்பு கேட்கும் அழகிரி ஸ்டாலினின் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவிப்பாரா என்ற கேள்வி நிலவுகிறது.


கருணாநிதி மறைவு திமுக தலைவர் கலைஞர் திமுக தலைவர் கருணாநிதி மரணம் மு.க.ஸ்டாலின் dmk leader karunanidhi karunanidhi death kalaignar death anna memorial karunanidhi death karunanidhi dead கருணாநிதி mk stalin திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்
தமிழகம்

Leave a comment

Comments