2ஜி வழக்கு: கனிமொழி, ராசா கோரிக்கை ஏற்பு; வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

2ஜி வழக்கு: கனிமொழி, ராசா கோரிக்கை ஏற்பு; வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் கனிமொழி, அ.ராசா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

2ஜி வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பதில் மனு தாக்கல் செய்ய கனிமொழி, அ.ராசா ஆகியோர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் மாதம் 9-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

2G Spectrum case adjourned to october 9

2ஜி வழக்கு கனிமொழி ராசா சிபிஐ 2ஜி அலைக்கற்றை அமலாக்கத்துறை டெல்லி உயர் நீதிமன்றம் திமுக காங்கிரஸ் Kanimozhi DMK 2G Case 2G Spectrum Congress Raja Enforcement Directorate Delhi High Court
தமிழகம்

Leave a comment

Comments