பிறந்த நட்சத்திரத்திலேயே இறந்த கருணாநிதி: ஜோதிடர்களின் ஆய்வுகளில் ஆச்சரிய தகவல்கள்

பிறந்த நட்சத்திரத்திலேயே இறந்த கருணாநிதி: ஜோதிடர்களின் ஆய்வுகளில் ஆச்சரிய தகவல்கள்

சென்னை :  தமிழ்நாட்டில் பிரபலமான ஜோதிடர்களில் மிகவும் சொல்வன்மை மிக்க ஜோதிடராக விளங்குபவர் முனைவர் கே.பி.வித்யாதரன். இவர் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பல்வேறு முக்கிய பிரமுகர்களின் ஜாதகங்களை பார்த்து  அவர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் குறித்த கருத்துகளை பதிவு செய்து வருகிறார் .

அதனடிப்படையில் கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி இறந்த கலைஞர் கருணாநிதி பற்றிய தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.திமுக தலைவர் கருணாநிதி தனது பிறந்த நட்சத்திரமாகிய மிருகசீரிட நட்சத்திரத்திலும் பிறந்த ராசியுமான ரிஷப ராசியிலுமே இறந்திருப்பது ஜோதிட விதிகளின்படி ஒரு புண்ணிய அமைப்பாகும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இறந்திருக்கின்ற திதியானது ஏகாதசி திதியாகும், இந்நாளில் தான் கிருஷ்ண பரமாத்மா, அர்ச்சுனனுக்கு மீண்டும் பூமியில் பிறவா மோட்ச யோகத்தைத் தர பகவத் கீதையை உபதேசிக்கத் தொடங்கினார் என்பது ஜோதிட சாஸ்திர வரலாறு ஆகும்.

ஜோதிட விதிகளின்படி பிறந்த நட்சத்திர அதிபதி செவ்வாய், மோட்சகாரகன் கேதுவுடன் இணைந்திருக்கும் நேரத்திலும் (மாலை 6.10 மணி) எண் ஜோதிடப்படி சித்த புருஷர்களுக்குரிய எண்ணான 7-ம் தேதியில் இன்னுயிர் நீத்திருப்பதும், அவர் உருவாக்கிய இயக்கமும் நிலைத்து வளரும் என்பதையே உணர்த்துகிறது.

கலைஞரது மறைவு, ஜாதிகளை வேரறுக்க வந்த ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கலைஞர் எழுதி அனைவரது மனதிலும் இடம்பிடித்ததோடு மட்டுமல்லாமல்,  அனைவருக்கும் குருவாகவும் வழிகாட்டியாகவும் இருந்து சரித்திரம் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அவர்  தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

ஜோதிடம் ஜோதிட சாஸ்திரம் பிரபல ஜோதிடர் கே.பி.வித்யாதரன் kp vidhyadharan Astrologer Jothida Rathna
ஆன்மிகம்

Leave a comment

Comments