வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா துவக்கம்

வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா துவக்கம்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகிலுள்ள வடக்கு கோணத்தில் அமைந்துள்ளது  புனித அன்னம்மாள் ஆலயம். இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம் .இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

நாகர்கோவில் வடக்கு கோணத்தில் புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது. விழாவின் முதல் நாளான இன்று  காலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு வட்டார முதன்மை அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமை தாங்குகிறார். அதைத் தொடர்ந்து அருட்பணியாளர் ஷாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். அதனையடுத்து ஒவ்வொரு நாளும் சிறப்பு  பிரார்த்தனை நிகழ்ச்சியும் ஜெப கூட்டங்களும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

விழாவின் இறுதி நாளான 19-ந் தேதி நடைபெறும் ஞாயிறு திருப்பலிக்கு ஜோக்கின் தலைமை தாங்குகிறார். திருவிழா திருப்பலியையும், மறையுரையையும் மறைமாவட்ட முதன்மை பணியாளர் கில்லாரிஸ் நிறைவேற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர் பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடியிறக்கம் ஆகியன நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ரவிகாட்சன் கென்னடி, பங்கு பேரவையினர், பங்கு மக்கள், அருட் சகோதரிகள் செய்து வருகிறார்கள். 

நாகர்கோவில் வடக்கு கோணம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா Nagercoil Vadakku Konam
ஆன்மிகம்

Leave a comment

Comments