ஆடி மாத கடைசி வெள்ளி : ஆடி வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்களுக்கு பலன் என்ன?

ஆடி மாத கடைசி வெள்ளி : ஆடி வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்களுக்கு பலன் என்ன?

ஆடி  வெள்ளி : ஆடி வரலட்சுமி விரதத்தினை முன்னிட்டு கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு

மாரியை வரவழைப்பவளாகவும் மனம் இறங்கி பக்தர்களுக்கு அருள்பவளாகவும் இருப்பதால் ஆடி மாதம் முழுக்க அம்மன் வழிபாடு சிறப்பு வாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது .ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். 

வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கை.ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக் கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. விரத நாளன்று திருமகளை கலசத்தில் எழுந்தருளச் செய்து, தேங்காய், பழம், வெற்றிலை,பாக்கு, கொழுக்கட்டை முதலானவற்றைச் சமர்ப்பித்து, திருமகளுக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி, தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.

இந்த வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் நோன்பு கயிறை வயதில் மூத்த சுமங்கலிகளிடம் ஆசி பெற்று, அவர்கள் மூலம் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். இதனால் கன்னிப்பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமையும் மற்றும் சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.
இன்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோயில்களில் காலையிலேயே ஏராளமான பெண்கள் திரண்டிருந்தனர். இன்று ஆடி, கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் பெண்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புற்று கோயில்களில் பெண்கள் பால் ஊற்றி  சிறப்பு வழிபாடு செய்தனர்.

ஆடி மாதம் கடைசி வெள்ளி ஆடி வரலட்சுமி விரதம் Aadi velli Aadi viradham
ஆன்மிகம்

Leave a comment

Comments