கள்ளத் தொடர்பு: கண்டித்த கொளுந்தனின் மர்ம உறுப்பில் தாக்கி கொன்ற அண்ணியார்!

கள்ளத் தொடர்பு: கண்டித்த கொளுந்தனின் மர்ம உறுப்பில் தாக்கி கொன்ற அண்ணியார்!

ஈரோடு: ஈரோடு அருகே வழித்தவறிச் சென்ற அண்ணியை திருப்பிக் கூட்டி வந்த கொளுந்தனை தனது குடும்பத்துடன் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெரியசேவூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மனைவி லட்சுமி. இவருக்கு பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகாத உறவால் கடந்த சில நாட்களுக்கும் முன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இதனால் குடும்ப மானம் போனதை எண்ணி வருந்திய மணிகண்டனின் தம்பி செல்வக்குமார், அண்ணி லட்சுமியை தேடி கண்டுப்பிடித்து திரும்பி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால், செல்வக்குமார் மீது கடும் கோபத்தில் இருந்த லட்சுமி, கடைவீதிக்கு சென்றுவிட்டு மனைவியுடன் வந்துக் கொண்டிருந்த செல்வக்குமாரை வழிமறித்து வம்பிழுத்துள்ளார். செல்வக்குமாரை சுற்றி வளைத்த லட்சுமியின் சகோதரிகள் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அவரை உருட்டுக்கட்டையால் பலமாக தாக்கியுள்ளனர்.

இதனை பார்த்து பதறிப்போன செல்வக்குமாரின் மனைவி எவ்வளவோ முயற்சித்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனிடையே, செல்வக்குமாரின் மீது தீராக் கோபத்தில் இருந்த லட்சுமி, அவரது உடைகளை களைந்து, காலில் கல்லைத் தூக்கி போட்டு, மர்ம உறுப்பில் எட்டி உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளார்.

இது குறித்து தகவலறிந்து வந்த அப்பகுதி போலீசார், செல்வக்குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், எதிர்ப்பாராதவிதமாக செல்லும் வழியிலேயே செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். லட்சுமியின் பேயாட்டத்தையும், செல்வக்குமாருக்கு நேர்ந்த கொடூரத்தையும் வீடியோ எடுத்த நபர் அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தது விமர்சனத்துக்குள்ளானது.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் லட்சுமி உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தவறான வழியில் சென்ற மகளை கண்டிக்காமல், அதனை கண்டித்த இளைஞரை குடும்பத்துடன் சேர்ந்து கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளத் தொடர்பு மர்ம உறுப்பை தாக்கி கொலை ஈரோடு இளைஞர் அடித்துக் கொலை அண்ணியை கண்டித்த கொளுந்தன் Illicit Relationship Man beaten to death Men brutally beaten Erode Family dispute
தமிழகம்

Leave a comment

Comments