டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு வெளியீடு

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நடத்தப்படும் தேர்வால் நிரப்பப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சார் பதிவாளர், நகராட்சி ஆணையர், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வு நவம்பர் 11-ம் தேதி நடத்தப்படுகிறது. 1199 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி, வயது வரம்பு, இட ஒதுக்கீடு, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வுக் கட்டணம் மற்றும் பிற விவரங்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in வெளியிடப்பட்டள்ள அறிவிப்பை காணலாம்.

TNPSC Group 2 exam announced

டிஎன்பிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC TNPSC Group 2 exam date TNPSC Group 2 exam
தமிழகம்

Leave a comment

Comments