திருப்பதியில் திவ்ய தரிசனம் மற்றும் நடைபாதை தரிசனம் நிறுத்தம்

திருப்பதியில் திவ்ய தரிசனம் மற்றும் நடைபாதை தரிசனம் நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திவ்ய தரிசனம் மற்றும் நடைபாதை தரிசனத்தை ரத்து செய்தது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது .12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 11-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதனை அடுத்து இன்று முதல் 16ம் தேதி வரை திவ்ய தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 300 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனம் மற்றும் முக்கிய நபர்களுக்கான சிறப்பு தரிசனம் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருமலைக்கு நேராக வருபவர்களில், நாளை 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை மறுநாள் 28 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் எனவும்,16ம் தேதி வரை அடுத்தடுத்த நாட்களில் 25 முதல் 35 ஆயிரம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இன்று காலையில் திருப்பதிக்கு வந்த நடைபாதை தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.ஏற்கனவே ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டிருந்த 300 ரூபாய் தரிசனத்தை மட்டும் 11-ந்தேதி வரை அனுமதிக்கின்றனர். அதன் பின்னர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த நாள்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 16-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

#TirupatiTemple  #திருப்பதி  #கும்பாபிஷேகம்   #kumbabishekam  #Divya darshan,

திருப்பதி திவ்ய தரிசனம் நடைபாதை தரிசனம் கும்பாபிஷேகம் Tirupati Tirumala Tirupati Devasthanams
ஆன்மிகம்

Leave a comment

Comments