நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றது

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29-ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வரை இரு அமர்வுகளாக நடைபெற்றது. காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த மாநில உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரு அமர்வுகளும் முறையாக நடத்த முடியாமல் போனது.

இதையடுத்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜுலை 18-ம் தேதியன்று கூடியது. இந்த கூட்டதொடரானது ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி (இன்று) வரை 18 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 125 வாக்குகளும், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக 325 வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில், கடந்த ஜுலை 18-ம் தேதியன்று கூடிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, தேதி குறிப்பிடாமல் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டது.

Parliament's Monsoon Session finished today

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமித்ரா மகாஜன் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் Parliament Monsoon Session Monsoon Session BJP Congress no confidence motion telugu desam party
இந்தியா

Leave a comment

Comments