மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றியே தீருவேன்: டிராஃபிக் ராமசாமி பரபரப்பு பேட்டி!

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றியே தீருவேன்:   டிராஃபிக் ராமசாமி பரபரப்பு பேட்டி!

மேட்டுப்பாளையம் : மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விட மாட்டேன் என்று சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைக்கக்கூடாது என்ற வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அந்த 5 வழக்குகளும்  வாபஸ் பெறப்பட்டன. இந்த வழக்குகளில் டிராஃபிக் ராமசாமியின் வழக்கும் ஒன்றாகும். மற்ற வழக்குகளோடு டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் வாபஸ் வாங்கப்படும் என அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார்.இந்நிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களை  சந்தித்த அவர், 'அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா இந்த மூன்று பேரின் சமாதியும் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு, நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும் போது  திமுகவிற்கு அவர்கள் அனுமதி அளிக்க முடியாது' என்று டிராஃபிக் ராமசாமி  தெரிவித்துள்ளார்.'திமுக தலைவர்  கலைஞர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இன்னும் அதற்கான நகல் எனக்கு  கிடைக்கவில்லை,  கிடைத்தவுடன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

திமுக காவேரி மருத்துவமனை கலைஞர் கருணாநிதி கருணாநிதி இறுதி அஞ்சலி கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி கருணாநிதி இறுதி சடங்கு ராஜாஜி ஹால் Kauvery Hospital karunanidhi death Karunanidhi dead Karunanidhi Funeral Live Updates Karunanidhi டிராபிக் ராமசாமி
தமிழகம்

Leave a comment

Comments