மீண்டும் கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி - வீடியோ

மீண்டும் கைது செய்யப்பட்டார் திருமுருகன் காந்தி - வீடியோ

சென்னை: மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிட முடியாது என சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக ஐ.நா.வில் பேசியதற்காக பழைய போராட்ட வழக்குகளைக் காரணம் காட்டி திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் குடிவரவு துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பெங்களூர் போலீசார் அவரை நேற்று முழுக்க விசாரித்தனர். அரசுக்கு எதிராக பேசுவது, இந்தியாவிற்கு எதிராக வெளிநாட்டில் பேசுவது ஆகிய காரணங்களை கூறி தேசதுரோக வழக்கில் கைது செய்தனர்.

தமிழக காவல்துறை இன்று அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். பின்னர் தமிழக போலீசால் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், திருமுருகனுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் அவரை சிறைக்கு அனுப்ப முடியாது என உத்தரவிட்டார். அதனோடு காவல்துறைக்கும் கண்டனம் தெரிவித்தார்.


நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த திருமுருகன் காந்தியை மீண்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்போது வாரண்ட் இல்லாமல் கைது செய்வது சட்டவிரோதமானது என்றும், அதனால் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்க முடியாது என்றும் திருமுருகன் காந்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் காவல்துறையினர் அவரை அழைத்து சென்றுள்ளனர்.திருமுருகன் காந்தி மே 17 இயக்கம் Thirumurugan Gandhi Sterlite shootout sterlite protest
தமிழகம்

Leave a comment

Comments