அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதற்பட்டியலில் 1.4 கோடிக்கும் அதிகமான பெயர்கள் சேர்க்கப்படவில்லை

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதற்பட்டியலில் 1.4 கோடிக்கும் அதிகமான பெயர்கள் சேர்க்கப்படவில்லை

அசாம்: அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதற்பட்டியலில் 1.4 கோடிக்கும் அதிகமான பெயர்கள் சேர்க்கப்படவில்லை

அசாமின் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முதற்கட்ட பட்டியல் நேற்று நள்ளிரவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில், அப்பட்டியலில் 1.4 கோடிக்கும் அதிகமான பெயர்கள் விடுப்பட்டுள்ளன. தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்காக விண்ணப்பித்த 3.3 கோடி விண்ணப்பங்களில் 1.9 கோடி பேரின் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிவேட்டில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் விடுப்பட்டுள்ள 1.4 கோடி பேர் என்பது அசாம் மக்கள் தொகையில் 40 சதவீதமாகும். இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையான பட்டியல் தயாராகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

இப்பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் பத்ரூதின் அஜ்மல், உல்பா ஆயுத இயக்கத் தலைவர் பரேஷ் பரூவா பெயரும் விடுப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறியுள்ளவர்களை கண்டறியும் வகையில்,  அசாம் மாநிலத்திற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பிரத்யேக நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது . இத்திட்டம்  கடந்த 1951-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகத்தால் முதல்முறையாக உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மார்ச் 1971-ம் ஆண்டுக்கு பிறகுஅசாமில் நுழைந்தவர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என கருதப்படுவார்கள்.

இறுதிப்பட்டியலில்  எந்த இந்திய குடிமகனின் பெயரும் விடுபடாது’ என அசாம் முதல்வர் சர்பாநந்தா சோனாவால் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு வெளியேற்றப்படுவார்கள் என கடந்த ஏப்ரல் மாதம் அசாம் மாநில பாரதிய ஜனதா உறுதியளித்திருந்தது. அதே சமயம், ஹிந்துக்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், வங்கதேசத்தின் தாழ்த்தப்பட்டப் பிரிவினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என பாரதிய ஜனதா கூறியிருந்தது. இது நேரடியாக இஸ்லாமியர்களை குறிவைக்கும் முயற்சி என பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. முன்னதாக,  தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்படுவதையொட்டி  50,000 த்திற்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Assam Assam peoples India அசாமி அசாம் மக்கள்
இந்தியா

Leave a comment

Comments