ஒரு தீர்வு சொல்லட்டா #Friends; நேயரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

ஒரு தீர்வு சொல்லட்டா #Friends; நேயரின் கேள்விக்கு உளவியலாளர் குமரன் குமணனின் பதில்

சென்னை: உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends-ல் உளவியலாளர் குமரன் குமணன் வாசகரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அனைவருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும் உளவியல் பிரச்னையை தீர்ப்பதற்காக டாப் தமிழ் நியூஸ் செய்தி நிறுவனம் ஒரு தீர்வு சொல்லட்டா #Friends -என்ற வாசகர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் உளவியலாளர் குமரன் குமணன் வாரா வாரம் வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்க இருக்கிறார்.

அந்த வகையில், இந்த வாரம் நேயர் ஒருவர் கேட்ட கேள்வியும், அதற்கு உளவியலாளர் குமரன் குமணன் அளித்த தெளிவான பதிலும் பின்வருமாறு:

கேள்வி: நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன். வெளியாட்களுடன் மற்றவர்களைப் போல் பேசி பழகவேண்டும் போல் இருக்கிறது. ஆனால் அவர்கள் என்னிடம் பேசுவார்களா என பயமாக உள்ளது. இதிலிருந்து வெளிவருவது எப்படி ?

பதில் : இது நல்லதொரு கேள்வி ! இன்றைய சூழலில் வெவ்வேறு காரணங்களால் பலரும் எதிர்கொள்கிற நிலை தான் இது .சிலருக்கு "தயக்கம் " என்பதே "பயம் " என மாறும் அளவுக்கும் சென்றுவிட்ட பின்னும் அவர்கள் தீர்வை நோக்கி நகர்வதில்லை . நீங்கள் நகர்ந்திருக்கிறீர்கள் .வாழ்த்துக்கள் .

கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு நன்றாக தெரியும் . ஓரு வகுப்பறையில் ,ஒரு துறை அல்லது பாடப்பிரிவில் எத்தனை மாணவர்கள் படிப்பார்கள் என.

இந்த பயத்தை ,தயக்கத்தை ,இதற்கு மேலும் பெரிதாக ஆக்காமல் ,ரொம்பவும் தொலைநோக்கில் சிந்திக்காமல் முதலில் உங்கள் வகுப்பறையில் உங்கள் அருகில் அமரும் நபருடனேயே பேச தொடங்கலாம். அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை வைத்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லலாம் ! சமூகத்தில் நமக்கான அடையாளத்தை கொடுப்பது ,பிறருடன் நிகழும் உரையாடல்களே ! அவை நிகழ்வதில் தாமதமாகலாம் .அவை தடைபட்டு போக கூடாது ..


மேலும் ,ஒவ்வொரு தனி மனிதருக்கும் மற்றோருவரோடு நட்பு கொள்ள ,வெவ்வேறு விஷயங்கள் காரணியாக அமைய வாய்ப்புண்டு .உங்கள் விருப்பத்துக்கு உரியதாக இருக்கும் விஷயங்களை விரும்பும் நபர் ,நீங்கள் எளிதில் அடையக்கூடிய வகையிலோ அல்லது தோலைவிலோ இருக்கலாம் ! இந்த ஒரே ஒரு விஷயம் புரியாததால் தான் ,பலருக்கு  நண்பர்கள் தாமதமாக கிடைக்கின்றனர் .அல்லது நண்பர்களே கிடைக்காத சூழலும் ஏற்படுகிறது .இந்த விஷயத்தில் புரிதலை அடையும் வரை பாதை மிக கடினமாகத்தான் இருக்கும் ! ஆனால் புரிந்துவிட்டால் பின் நண்பர்களை பெறுவதிலும் தக்கவைத்துக் கொள்வதிலும் ஏற்படும் சிக்கல்களை பெருமளவு குறைக்க இயலும் .

தற்போது நீங்கள் படிக்கும் பதிலை எழுதியள்ள நான் ,ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு பின் நேரடியாக பள்ளிக்கும் ; மொத்தமாகவே நேரடியாக கல்லூரிக்கும் செல்லாத மாற்றுத்திறனாளி என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .

இன்று எனக்கிருக்கும் நட்புக்கள் எல்லாம் இணையம் மூலம் கிடைத்தவை ,அதுவும் முதன்முதலாக கிடைத்த ஓரு ஆழமான நட்பின் சங்கிலித்தொடராக அமைந்துவிட்ட வட்டம் . விளைவு : இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர் .

என்னால் முடியும் என நான் நினைந்தேன் ..செயல்பட்டேன் .முடித்தேன் ! நீங்களும் நினைத்து செயலாற்றுங்கள் ! சிறுதுளி ஒன்றின் மூலம் பெருவெள்ளம் உருவாகும் .வாழ்த்துக்கள் .வெல்வோம் .

ஒரு தீர்வு சொல்லட்டா பிரண்ட்ஸ் குமரன் குமணன் உளவியலாளர் குமரன் குமணன் our theervu sollata friends kumaran kumanan psychologist kumaran kumanan top tamil news
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments