சென்னையில் ஹானர் 9என் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார் நடிகை ஓவியா – புகைப்படங்கள்

சென்னையில் ஹானர் 9என் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார் நடிகை ஓவியா – புகைப்படங்கள்

சென்னை: நடிகை ஓவியா ஹானர் 9என் ஸ்மார்ட்போனை சென்னையில் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக ஹானர் 9என் ஸ்மார்ட்போனை பூர்விகா மொபைல்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த அறிமுக விழாவில் பிரபல நடிகை ஓவியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் புத்தம் புதிய ஹானர் 9என் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்.

ஹானர் 9என் சிறப்பம்சங்கள்:

- 5.84 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்பிளே

- ஆக்டா-கோர் கிரின் 659 பிராஸசர்

- 3 ஜிபி / 4 ஜிபி ரேம் வகைகள்

- 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்

- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

- 13 எம்பி + 2 எம்பி இரட்டை பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 16 எம்பி செல்ஃபி கேமரா

- விரல்ரேகை சென்சார்

- ரைட் மோட், பார்டி மோட்

- 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

- 3000 எம்ஏஎச் பேட்டரி

இந்தியாவில் ஹானர் 9என் ஸ்மார்ட்போன் லாவென்டர் பர்ப்பிள், ராபின் எக் புளு, சஃபையர் புளு மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 3 ஜிபி ரேம் வெர்ஷன் விலை ரூ.11,999 என்றும் 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வெர்ஷன் விலை ரூ.13,999 மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வெர்ஷன் விலை ரூ.17,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Actress oviya honor 9n oviya introduce honor 9n oviyaa Chennai நடிகை ஓவியா ஹானர் 9என் ஓவியா சென்னை
தொழில்நுட்பம்

Leave a comment

Comments