இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழில் பேசி அசத்திய ‘தமிழன்’ தினேஷ் கார்த்திக் – வீடியோ உள்ளே !

இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் தமிழில் பேசி அசத்திய ‘தமிழன்’ தினேஷ் கார்த்திக் – வீடியோ உள்ளே !

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜோரூப் 80 ரன்னும், பேர்ஸ்டோவ் 70 ரன்னும், ஜென்னிஸ் 42 ரன்னும் எடுத்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 88 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 4 விக்கெட்டும், முகமது சமி 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இப்போட்டியில் அஷ்வின் பந்துவீசும் போது விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்த தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி அஷ்வினை உற்சாகப்படுத்தினார். ஆட்டத்தின் 16-வது ஓவரை அஷ்வின் வீசியபோது ஜென்னிங்ஸ் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது தினேஷ் கார்த்திக், “டேய் மாமா...நீ வேற மாதிரிடா மாமா...அப்படியே போடு...தூக்கிடலாம்...என்ன பண்றான்னு பாக்கலாம் மாமா!” என்று தமிழில் பேசி அஷ்வினை உற்சாகப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது தினேஷ் கார்த்திக் இதுபோன்று தமிழில் பேசுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற டி20 தொடரின்போதும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் விஜய் ஷங்கர் ஆகிய தமிழக வீரர்களுடன் அவர் தமிழில் பேசிக் கொண்டது வைரலானது. வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசி தமிழர்களை பெருமை கொள்ள செய்வதாக நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Dinesh Karthik ashwin dinesh karthik speech in tamil England 1st Test match india England test match தினேஷ் கார்த்திக் அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணி இந்தியா இங்கிலாந்து
விளையாட்டு

Leave a comment

Comments