16எம்பி செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

16எம்பி செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

மும்பை: சாம்சங் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போனை தொடர்ந்து கேலக்ஸி ஆன்8 (2018) ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சங்களாக 6.0 இன்ச் ஹெச்டி வளைந்த கிளாஸ் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர், 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.0 (ஓரியோ) இயங்குதளம், 16 எம்பி செல்ஃபி கேமரா, ஃபேஸ் அன்லாக் ஆகியவை உள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஆன்8 சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் ஹெச்.டி டிஸ்பிளே

- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்

- டூயல் சிம் ஸ்லாட்

- 16 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- விரல்ரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் வசதிகள்

- 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

- 3500 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆன்8 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளு ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் இதன் விலை ரூ.16,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்டு 6-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் தொடங்குகிறது.

Samsung galaxy on8 Samsung galaxy j8 Samsung brand Samsung smartphone flipkart சாம்சங் கேலக்ஸி ஆன்8 சாம்சங் கேலக்ஸி ஜெ8 சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments