பியூட்டி டிப்ஸ்: இயற்கை / செயற்கையான முறையில் முகத்தை அழகுபடுத்துவது எப்படி?

பியூட்டி டிப்ஸ்: இயற்கை / செயற்கையான முறையில் முகத்தை அழகுபடுத்துவது  எப்படி?

ஆண்களை  விடப் பெண்களே தங்களை அழகுபடுத்தி கொள்வதை ஆர்வம் கொள்கின்றனர். வெயிலில் தங்கள் சருமம் கருத்து விடக் கூடாது என்பதற்காக  முகம் தெரியாத அளவிற்குத் துணியினால் முகத்தை மூடிச் செல்லும் பெண்களை நம்மால்  அதிகம் பார்க்கமுடிகிறது. 

தூசு, வெயில், தூக்கமின்மை  எனப் பல காரணங்களால்  நமது சருமம் எளிதில் பாதிப்படைகிறது. இதற்காகத் தான் பெண்கள் பலர் சருமப் பாதுகாப்புப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.நமது சருமம் பாதிப்பில்லாமல் இருக்க எந்த மாதிரியான அழகு பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை இங்குப் பார்க்கலாம்.*எண்ணெய் சருமம், வறண்டச் சருமம் என இரு சருமத்திற்கும் ஏற்றவாறு, ஜெல் மற்றும் லோஷன் வகைகளில் கிளென்சர் கிடைக்கிறது. இது சருமத்தின் இறந்த செல்கள், எண்ணெய் பிசுபிசுப்பு, அழுக்குகள் மற்றும் காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகள், சரும வெடிப்புகள் ஆகியவற்றை நீக்க உதவுகிறது. 

*சன்ஸ்கிரீன் சருமத்தைப் பொலிவிழக்கச் செய்து வயதைக் கூட்டுவதுபோல் காட்டும் பிரச்சினை, யு.வி.பி எனப்படும் சூரியனால் ஏற்படும் கருமை, வேனிற்கட்டி, அரிப்பு ஆகிய இப்பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும் செயல்படுகிறது.

*சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, குளுமையுடன் வைத்துக்கொள்ள  உதவுகிறது மாய்ஸ்சரைஸர். இதனால் சருமத்திற்குப் பொலிவை ஏற்படுத்துகிறது. காற்று மாசுபாட்டைச் சருமத்திற்குள் நேரடியாக அண்டவிடாமல் லேயராக செயல்படுகிறது. 
*முகப்பருக்கள், கரும்புள்ளிகள், சரும வெடிப்புகள் என எல்லா வகையான சருமப் பிரச்சினைகளுக்கும் ஃபேஸ் வாஷ் உதவுகிறது. இதில் எண்ணெய் சருமம், வறண்டச் சருமம் என தனித்தனியே வகைகள் உள்ளன. எப்போதும் உடன் வைத்துக்கொள்வதற்கு ஏற்ப, சிறிய பேக்குகளிலும் தற்போது கிடைக்கின்றன. 

*வறண்ட உதடுகளுக்கு ஈரப்பதத்தை ஏற்படுத்தக்கூடியது லிப் பாம். உதடு எளிதில் காய்ந்துவிடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வுதான் லிப் பாம். புற ஊதாக் கதிரை எதிர்க்கும் எஸ்.பி.எஃப் தன்மை கொண்ட லிப் பாம் மூலம் உதடுகளைப் பாதுகாக்கலாம். *அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற இந்த ஃபேஷியல் மிஸ்ட்டுகள் கற்றாழை, லாவண்டர், ரோஸ் எஸன்ஸ், மின்ட் எனப் பல வாசனைகளிலும் கிடைக்கின்றன. வெயிலில் இருந்து காக்கும் இந்த ஃபேஷியல் மிஸ்ட்டை எப்போதும் உடன் வைத்திருங்கள். உங்கள் சருமத்திற்கு ஈரப்பதம் தேவைப்படும்போது ஸ்பிரே செய்யுங்கள்.

*என்ன தான் அழகு பொருட்கள்  கொண்டு நமது சருமத்தை நாம் பாதுகாக்க நினைத்தாலும் சிலருக்கு அதுவே ஆபத்தாகி விடும்.இது போன்ற செயற்கையான முறையில் அழகை பாதுகாக்க முடியாதவர்கள் தயிர்,மஞ்சள் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் பேக் போடலாம்.*அதே போல் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கத் தக்காளியை சர்க்கரையில் தொட்டு முகத்தில் பூசி மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை  பொலிவாக வைத்துக் கொள்ள முடியும்.

*உருளை கிழங்கு அல்லது பாலை பிரிஜ்ஜில்  வைத்து கட்டியான பின் அதை முகத்தில் தேய்த்து வர முகம் பொலிவுடன்  காணப்படும்.


beauty tips beauty bright skin dark skin natural beauty tips natural beauty tips in tamil beauty tips in tamil life style முகப்பருக்கள் மசாஜ் சரும வெடிப்புகள்
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments