தாஜ்மஹாலை பார்வையிட ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

தாஜ்மஹாலை பார்வையிட ஒரு நாளைக்கு 40 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

ஆக்ரா: தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க இனி ஒரு நாளைக்கு 40 ஆயிரும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மட்டுமே அனுமதிக்க திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற 20-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது. பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான தாஜ்மஹாலை  பார்வையிட  இந்தியாவின் பிறமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தாஜ்மஹாலை இனி தினமும் 40 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே பார்ப்பதற்கு அனுமதிக்க திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வருகிற 20-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கும்படி உத்தரபிரேதச மாநில அரசு மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய அரசு அனுமதி அளித்து விடும் என்று தெரிகிறது. இதற்கிடையே தாஜ்மஹாலை பார்ப்பதற்கான கட்டணத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளனர். சிறுவர்களுக்கு ரூ.50, பெரியவர்களுக்கு ரூ.100 என முடிவு செய்துள்ளனர்.

வெளிநாட்டு பயணிகளுக்கு ரூ.1000 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் தினமும் தங்குதடையின்றி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்தும் திட்டம் வெளிநாட்டு பயணிகளுக்கு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


india tajmahal tourister visit இந்தியா தாஜ்மஹால் சுற்றுலா பயணிகள்
இந்தியா

Leave a comment

Comments