2019-ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில் விளம்பரங்கள்

2019-ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில் விளம்பரங்கள்

டெல்லி: வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில் 2019-ஆம் ஆண்டு முதல் விளம்பரங்கள் வழங்கப்பட இருக்கிறது.

உலகில் எதுவும் இலவசமாக கிடைத்து விடாது. அவ்வாறு இலவசமாக கிடைக்கிறது என்றால் அதைப் பெறுபவர் தான் அதற்கான விலை என்று ஒரு கூற்று உள்ளது. இன்று இலவச சேவைகளாக அளிக்கப்படும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளும் அவ்வாறு தான் செயல்படுகின்றன. அதைப் பயன்படுத்தும் பயனர்கள் தான் விலையாக கருதப்படுகிறார்கள். விளம்பரங்கள் மூலமாக பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் வருமானம் பெறுகின்றன.

அந்தவகையில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி, பின்னர் அவை வதந்தி என்று கூறப்பட்டது. ஆனால் இம்முறை வாட்ஸ்அப் உண்மையாகவே கட்டணம் வசூலிக்கவுள்ளது.

அதன்படி வாட்ஸ்அப் பிசினஸ் செயலியில் குறுந்தகவல்களுக்கு 24 மணி நேரத்திற்கு பின் பதில் அனுப்பினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. மேலும் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்களை வழங்க திட்டமிடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இவை அடுத்தாண்டு முதல் (2019) அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Whatsapp business whatsapp status whatsapp ads facebook ads வாட்ஸ்அப் விளம்பரம் பேஸ்புக் விளம்பரம் சமூக வலைத்தளம்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments