விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சாதித்த விராட் கோலி, அஷ்வின்!

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி: இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் சாதித்த விராட் கோலி, அஷ்வின்!

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் அஷ்வின் இருவரும் சிறப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும், இந்திய அணி 274 ரன்களும் எடுத்தன. இதனைத் தொடர்ந்து 3-வது நாளான இன்று இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்ஸில் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது.

நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியில் தனியொரு ஆளாக சிறப்பாக பேட்டிங் செய்த கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை அவர் பதிவு செய்துள்ளார். அதேபோல முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசிய அஷ்வின் விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.

இந்தியா அணி கடந்த 2014-ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று விளையாடும்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என இழந்தது. இந்த தொடரில் விராட் கோலி 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் அஸ்வினும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், இருவரும் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளனர்.

Virat kohli ashwin England 1st Test match india England test match விராட் கோலி அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணி இந்தியா இங்கிலாந்து
விளையாட்டு

Leave a comment

Comments