5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் அறிமுகம்

கலிபோர்னியா: மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான மோட்டோ இசட்3 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் மோட்டோ மாட்ஸ் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எடை குறைவாகவும், 6000 சீரிஸ் அலுமினியம் ஃபிரேம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹோம் பட்டன் இல்லாமல், பக்கவாட்டில் விரல்ரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் 5ஜி மோட்டோ மாட் ஒன்றை மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனால் வெரிசான் 5ஜி நெட்வொர்க் பயன்படுத்தும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோ இசட்3 பெறுகிறது. அமெரிக்க டெலிகாம் நிறுவனமான வெரிசான் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் 2019-ஆம் ஆண்டு 5ஜி நெட்வொர்க்கை வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டோ இசட்3 சிறப்பம்சங்கள்:

- 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 அம்சம்

- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்

- 4 ஜிபி ரேம்

- 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

- 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா, லேசர் ஆட்டோ ஃபோகஸ்

- 8 எம்பி செல்ஃபி கேமரா

- வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி

- விரல்ரேகை சென்சார் அம்சம்

- 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி

- 3000 எம்ஏஎச் பேட்டரி, டர்போ சார்ஜிங்

மோட்டோ இசட்3 ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 480 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.32,940) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Moto z3 Motorola smartphone moto Verizon 5G smartphone மோட்டோ இசட்3 மோட்டோரோலா ஸ்மார்ட்போன் வெரிசான்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments