முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி; விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போராட்டம் வீண்

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி; விராட் கோலி, ஹர்திக் பாண்டியா போராட்டம் வீண்

பிர்மிங்காம்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும், இந்திய அணி 274 ரன்களும் எடுத்தன. இதனைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸில் களமிறங்கி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 180 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 51 ரன்களும், ஹர்திக் பாண்டியா 31 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இங்கிலாந்து தரப்பில் அருமையாக பந்துவீசிய பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராடு தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணியின் சாம் கரன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளும் மோது 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 9-ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.

Virat kohli ashwin England 1st Test match india England test match விராட் கோலி அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணி இந்தியா இங்கிலாந்து
விளையாட்டு

Leave a comment

Comments