1000-வது டெஸ்ட் போட்டியில் கெத்தாக வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி

1000-வது டெஸ்ட் போட்டியில் கெத்தாக வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி

பிர்மிங்காம்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 1000-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இது இங்கிலாந்து அணியின் 1000-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாகும். இதனால் இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடினர். அதற்கேற்ப தற்போது இந்திய அணியை வீழ்த்தி வெற்றியும் பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணி இதுவரை 1000 டெஸ்ட் போட்டிகளில் 358 போட்டிகளில் வெற்றியும், 297 போட்டிகளில் தோல்வியும், 345 போட்டிகளில் டிராவையும் சந்தித்துள்ளது. 1000-வது டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

Virat kohli ashwin England 1st Test match india England test match விராட் கோலி அஷ்வின் இந்திய கிரிக்கெட் அணி இந்தியா இங்கிலாந்து
விளையாட்டு

Leave a comment

Comments