குறைந்த விலையில் சியோமி ஃபியூஷன் போன்கள் அறிமுகம்

குறைந்த விலையில் சியோமி ஃபியூஷன் போன்கள் அறிமுகம்

டெல்லி: சியோமி நிறுவனத்தின் புதிய ஃபியூஷன் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை விற்று தான் சியோமி நிறுவனம் பிரபலமானது. இந்நிலையில், தற்போது க்வின் 1 மற்றும் க்வின் 1 எஸ் ஃபீச்சர்போன்களை அறிமுகம் செய்துள்ளது. யுபின் எனும் கிரவுட்ஃபன்டிங் தளம் மூலம் இந்தப் புதிய மொபைல் போன்களை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மேலும், ஃபீச்சர் போன் போன்று இல்லாமல் சியோமி மொபைலில் மேம்படுத்தப்பட்ட ல்மார்ட் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரியல்-டைம் மொழி மாற்றம் செய்யும் வசதியை இந்த மொபைல் போன்கள் கொண்டுள்ளது. இதன் க்வின் 1எஸ் மாடலில் 4ஜி கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

சியோமி க்வின் 1 சிறப்பம்சங்கள்:

- 2.8 இன்ச் QVGA 240x320 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே

- டூயல்-கோர் மீடியாடெக் MT6260A சிப்செட்

- 8 எம்பி ரேம்

- 16 எம்பி இன்டெர்னல் மெமரி

- வைபை, ப்ளூடூத்

- யுஎஸ்பி டைப்-சி போர்ட்

- 1480 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி க்வின் 1எஸ் சிறப்பம்சங்கள்:

- 2.8 இன்ச் QVGA 240x320 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே

- டூயல்-கோர் ஸ்ப்ரெட்ரம் SC9820E சிப்செட்

- 256 எம்பி ரேம்

- 512 எம்பி ரேம்

- 4ஜி வோல்ட்இ, வைபை ஹாட்ஸ்பாட், ப்ளூடூத்

- யுஎஸ்பி டைப்-சி போர்ட்

- 1480 எம்.ஏ.ஹெச். பேட்டரி

சியோமி க்வின் 1 மற்றும் க்வின் 1எஸ் ஸ்மார்ட்போன்களில் 17 மொழிகளை சப்போர்ட் செய்யும் வசதி, மெஷின் லேர்னிங் சார்ந்து இயங்கும் மொழி மாற்றம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பில்ட்-இன் இன்ஃப்ராரெட் பிளாஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் மொபைலை ரிமோட் போன்று பயன்படுத்தலாம். இந்த போன்கள் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய இரண்டு நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை CNY 199 (இந்திய மதிப்பில் ரூ.1,990) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Xiaomi Qin1 Xiaomi Qin1s Xiaomi smartphones xiaomi fusion phones சியோமி க்வின் 1எஸ் சியோமி க்வின் 1 ஸ்மார்ட்போன்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments