ஐசிசி டெஸ்ட் தரவரிசை; முதலிடம் பிடித்தார் விராட் கோலி

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; முதலிடம் பிடித்தார் விராட் கோலி

துபாய்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி இந்திய கேப்டன் விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது. இருப்பினும் இந்திய அணி கேப்டன் 200 ரன்கள் குவித்து ஏராளமான சாதனைகளை தகர்த்தெறிந்தார்.

இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 149, 51 ரன்கள் என மொத்தம் 200 ரன்கள் எடுத்ததால் 31 புள்ளிகள் உயர்ந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தை அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.  934 புள்ளிகளுடன் கோலி முதலிடமும், 929 புள்ளிகளுடன் ஸ்மித் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர்.

2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியர் ஒருவர் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி கோலி கோலி முதலிடம் விராட் கோலி முதலிடம் ஐசிசி டெஸ்ட் தரவரிசை தரவரிசையில் முதலிடம் பிடித்தார் விராட் கோலி இங்கிலாந்து இந்தியா virat kohli kohli first place kohli virat kohli first place in icc ranking england
விளையாட்டு

Leave a comment

Comments