தோல்வியிலும் சாதனை: வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து

தோல்வியிலும் சாதனை: வெள்ளிப் பதக்கம் வென்றார் பிவி சிந்து

நான்ஜிங்: உலக பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து படைத்துள்ளார்.

24–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு (2017) இறுதிப் போட்டிக்கு முன்னேறி வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து தொடர்ச்சியாக 2–ஆவது முறையாக இறுதிப்போட்டிக்குள் முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து–கரோலினா மரின் ஆகியோர் மோதினர். இருவரும் இதுவரை மோதிய 11 போட்டிகளிலில் கரோலினா மரின் 6 முறையும், சிந்து 5 முறையும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இன்றையை ஆட்டத்தில் பிவி சிந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார்.

முதல் ஆட்டத்தில் சிந்து கடுமையாக போராடினாலும் செட் கரோலினா வசம் சென்றது. இரண்டாவது ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் 11-2 என்ற வகையில் சிந்து பின்தங்கினார். அதன்பிறகு தொடர் அதிரடி ஆட்டத்தின் மூலம் செட்டை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி கரோலினா தங்கப்பதக்கம் வென்றார். பிவி சிந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்துள்ளார். 
PVSindhu Carolina Marin Badminton world championship china பிவி சிந்து
விளையாட்டு

Leave a comment

Comments