U20 கால்பந்து- அர்ஜென்டினாவை 2-1 என வீழ்த்தி சாதனைப் படைத்தது இந்தியா

U20 கால்பந்து- அர்ஜென்டினாவை 2-1 என வீழ்த்தி சாதனைப் படைத்தது இந்தியா

ஸ்பெயின்: 20 வயதிற்கு உட்பட்டோருக்கான காட்டிஃப் கால்பந்து தொடரில் அர்ஜென்டினாவை 2-1 என வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது.

20 வயதிற்கு உட்பட்டோருக்கான சர்வதேச காட்டிஃப் கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தனது முதல் மூன்று ஆட்டத்தில் இரண்டு தோல்வி, ஒரு டிராவை பெற்றிருந்தது. இந்நிலையில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய கால்பந்து வீரர்கள் 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் தீபக் டாங்க்ரி முதல் கோலை பதிவு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், 2-வது பாதி ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் ரெட் கார்டு மூலம் இந்திய வீரர் ஜாதவ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

எனவே இந்திய அணி 10 பேருடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாடியது. ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் அன்வர் அலி ஒரு கோல் அடிக்க 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து அர்ஜென்டினா அணி ஒரு கோல் அடித்தனர். எனினும் அதன் பிறகு இந்திய வீரர்கள் கோல் விட்டுக் கொடுக்காததால் இந்திய அணி 2-1 என்ற கோல்கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது.

U20 Indian football team COTIF Football argentina கால்பந்து இந்திய அணி அர்ஜென்டினா
விளையாட்டு

Leave a comment

Comments