ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை தொடங்கியது

ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை தொடங்கியது

டெல்லி: ஃபேஸ்புக் டேட்டிங் சேவைக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 நிகழ்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இந்த விழாவில் ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அதில் ஒன்று ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சார்ந்த அறிவிப்பும் ஆகும்.

இந்நிலையில், ஃபேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்கள் மத்தியில் சோதனை செய்யப்பட்டு வருவதாக டேட்டிங் ஆப் ஆய்வாளர் ஜேன் மேன்சுன் வாங் தெரிவித்துள்ளார். இதற்கான ஆதாரம் சேவையின் சோர்ஸ் கோடுகளில் இடம்பெற்று இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், டேட்டிங் ப்ரோஃபைல்களில் போலி தகவல்களை பதிவு செய்ய ஃபேஸ்புக் கேட்டுக் கொண்டிருப்பதாகவும், அனைத்து தகவல்களும் பொது வெளியீட்டுக்கு முன்பாக அழிக்கப்பட்டு விடும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook dating service testing social media ஃபேஸ்புக் டேட்டிங் சேவை
தொழில்நுட்பம்

Leave a comment

Comments