வடக்கன்குளம் பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

வடக்கன்குளம் பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருநெல்வேலி: வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம். இந்த ஆலயத்தின் 215-வது ஆண்டு தேர்பவனி திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக திருக்கொடி பவனியாக கொண்டு வரப்பட்டது. வடக்கன்குளம் பாதிரியார் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கி கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பாதிரியார்கள் மற்றும்  இறை மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.அதனை தொடர்ந்து திருவிழா வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது . காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மதியம் 12 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு ஜெபமாலையும் நடைபெறவுள்ளது. 

விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனையும் இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி 15-ந் தேதி புதன்கிழமை அதிகாலையில் நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 6.45 மணிக்கு மலையாள திருப்பலி, 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு நன்றி வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

#திருநெல்வேலி   #வடக்கன்குளம்

திருநெல்வேலி வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை கொடியேற்றம் Vadakkankulam Chinna Romapuri Holy Family Church
ஆன்மிகம்

Leave a comment

Comments