அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேர் நியமனம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுக செய்தித் தொடர்பாளர்களாக 12 பேரை நியமனம் செய்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க.வின் கொள்கைகளையும், குறிக்கோள்களையும், கோட்பாடுகளையும், நிலைப்பாடுகளையும் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

1.சி.பொன்னையன் (முன்னாள் அமைச்சர்)
2. பா.வளர்மதி ( கழக இலக்கிய அணி செயலாளர், தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர்)
3. எஸ்.கோகுல இந்திரா (முன்னாள் அமைச்சர்)
4. டாக்டர் வைகைச்செல்வன் (முன்னாள் அமைச்சர்)
5. ஜே.சி.டி.பிரபாகர், (கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைச்செயலாளர்)
6. டாக்டர் கோ.சமரசம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கிருஷ்ணகிரி மாவட்டம்)
7. ம.அழகுராஜ் (எ) மருது அழகுராஜ்
8. கோவை செல்வராஜ் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்டம்)
9. பேராசிரியர் தீரன் (எ) ஏ.ராஜேந்திரன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம் வடக்கு மாவட்டம்)
10. கே.சி.பழனிச்சாமி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாவட்டம்)
11. ஏ.எஸ்.மகேஸ்வரி (கோவை மேற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கோவை மாநகர் மாவட்டம்)
12. ஆர்.எம்.பாபு முருகவேல் (ஆரணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்)

மேற்கண்ட செய்தித் தொடர்பாளர்களைத் தவிர வேறு யாரும் அ.தி.மு.க. சார்பில் நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்களில் கலந்துகொண்டு பேசுவதற்கு தலைமைக் கழகத்தின் அனுமதி இல்லை என்பதையும், தோழமைக் கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் ஒய்.ஜவகர் அலி மட்டுமே ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்துகொள்வர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIADMK spokesperson ops eps ponnayan valarmathi gokula indra அஇஅதிமுக செய்தித்தொடர்பாளர் ஓபிஎஸ் இபிஎஸ் பொன்னையன் வளர்மதி
தமிழகம்

Leave a comment

Comments