புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் 60-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா ஆகஸ்ட் 16-ஆம் தேதி துவக்கம்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில்  60-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா ஆகஸ்ட் 16-ஆம் தேதி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் மிகவும் சிறப்பு வாய்ந்த மணக்குள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக  கொண்டாடப்படுவது வழக்கம் . அதன்படி இந்த ஆண்டிற்கான 60-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா வருகிற 16-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. இந்த விழா அடுத்த மாதம் செப்டம்பர் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை வேளையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளது.அதனை தொடர்ந்து  வருகிற 21-ந் தேதியன்று சித்தி புத்தி விநாயகர் திருக்கல்யாணமும், 25-ந் தேதி தேரோட்டமும்,27-ந் தேதி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோவில் திருக்குளத்தில் தெப்ப உற்சவமும் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.அதனையடுத்து 28-ந் தேதி இந்திர விமானம், 29-ந் தேதி முத்து விமானம், 30-ந் தேதி முத்துபல்லக்கு வீதி உலாவும், செப்டம்பர் 1-ந் தேதி ஊஞ்சல் உற்சவம், 3-ந் தேதி விடையாற்றி உற்சவம் மற்றும் 8-ந் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது . இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.#புதுச்சேரி #மணக்குளவிநாயகர் # பிரம்மோற்சவவிழா

புதுச்சேரி பிரம்மோற்சவ விழா மணக்குள விநாயகர் Manakula Vinayagar Puducherry
ஆன்மிகம்

Leave a comment

Comments