கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழாவிற்கான முன்னேற்பாடுகள் துவக்கம்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழாவிற்கான முன்னேற்பாடுகள் துவக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆகஸ்ட்  11-ந் தேதி ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. 

கன்னியாகுமரியில் அமைந்துள்ளது பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தில் சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது.

ஆடி அமாவாசை - சூரியன், சந்திர பகவானுக்கு உரிய ராசியாகிய கடக ராசியில் பிரவேசிக்கும் காலம். பித்ரு காரகனாகிய சூரியன், மாத்ரு காரகனாகிய சந்திரனுக்கு உரிய கடக ராசி மண்டலத்தில், சந்திரனுக்கு நேராக ஒன்றிணையும் காலம் ஆடி அமாவாசை. ஆகையால் தான், இறந்துவிட்ட நம் முன்னோர்களுக்கு உரிய காரியங்களை ஆடி அமாவாசையில் செய்வது, பித்ரு தோஷங்களை நீக்கி, முன்னோர்களின் பூரண ஆசிகளை நமக்கு பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.அமாவாசை தினத்தன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் மூலஸ்தான நடை திறக்கப்பட்டு அபிஷேகம், ஆடி களபபூஜை, ஸ்ரீபலிபூஜை, தீபாராதனை, உஷபூஜை, உச்சிகால பூஜை போன்றவைகள் நடைபெறுகிறது.

அதனையடுத்து  5 மணிக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக கோவிலின் பிரதான நுழைவுவாயில் திறக்கப்படுகிறது. ஆடி அமாவாசையையொட்டி அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படும். 

அன்று இரவு 8 மணிக்கு அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும், வருடத்தில் 5 விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் அன்றைய தினம் திறக்கப்பட்டு அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.ஆடி அமாவாசை அன்று குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரளாவின் தென்பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர்.


#கன்னியாகுமரி    #பகவதிஅம்மன்     #ஆடிஅமாவாசை

கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆடி அமாவாசை Kanyakumari Bhagavathi Amman
ஆன்மிகம்

Leave a comment

Comments