கேம் விளையாடுவதற்கு ஏற்ற தலைசிறந்த ‘ஹானர் பிளே’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

கேம் விளையாடுவதற்கு ஏற்ற தலைசிறந்த ‘ஹானர் பிளே’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

மும்பை: இந்தியாவில் ஹானர் பிளே கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேம் விளையாடுவதற்கு அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால், அதிக ரேம் மற்றும் கிராஃபிக்ஸ் வசதிகள் இல்லாத ஸ்மார்ட்போனில் கேமிங் அனுபவம் சிறப்பாக அமைவதில்லை. இதனை முன்னிட்டு அதற்கென்றே ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட ஸ்மார்ட்போனை ஹானர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதற்கு ‘ஹானர் பிளே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக கேமிங் செய்வதற்கு ஏற்ற வகையில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே, கிரின் 970 பிராசஸர், சக்திவாய்ந்த டர்போ கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மொபைல் கேம் விளையாடும்போது ஹேங் ஆவது, சீக்கிரம் சூடாவது போன்ற பிரச்சனைகள் எழாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹானர் பிளே சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி டிஸ்பிளே

ஆக்டா-கோர் ஹூவாய் கிரின் 970 பிராசஸர்

– 4 ஜிபி / 6 ஜிபி ரேம் வகைகள்

– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

– 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

– 16 எம்பி செல்ஃபி கேமரா

விரல் ரேகை சென்சார்

– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், 7.1-சேனல் ஹிஸ்டன் ஆடியோ

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

– 3750 எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

ஹானர் பிளே அறிமுக சலுகைகள்:

- தேர்வு செய்யப்பட்ட குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு கூடுதல் சேமிப்புகள்

- வோடஃபோன் பயனர்களில் ரூ.199-க்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்யும் போது 120ஜிபி வரை கூடுதல் டேட்டா

- வோடஃபோன் ரெட் சலுகையில் 10 ஜிபி கூடுதல் டேட்டா

- வோடஃபோன் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ஹானர் பிளே ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளு நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் 4ஜிபி ரேம் மாடல் ரூ.19,999 என்றும், 6ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.23,999 என்றும் நிர்ணயம் செயய்ப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஹானர் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Honor Play smartphone honor brand gaming smartphone ஹானர் பிளே ஸ்மார்ட்போன் ஹானர் நிறுவனம் கேமிங் ஸ்மார்ட்போன்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments