சியோமி ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சியோமி ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

டெல்லி: இந்தியாவில் சியோமி எம்ஐ ஏ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ ஏ1 ஸ்மார்ட்போனின் அப்டேட் வெர்ஷனாக சியோமி எம்ஐ ஏ2’ ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஸ்பெயினில் இந்த ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.

சியோமி எம்ஐ ஏ2 ஸ்மார்ட்போன் புளு, கோல்டு மற்றும் பிளாக் ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விரைவில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ ஏ2 சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே

- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 பிராஸசர்

- 4 ஜிபி / 6 ஜிபி ரேம் வகைகள்

- 32 ஜிபி / 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

- டூயல் சிம் ஸ்லாட்

- 12 எம்பி + 20 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- விரல்ரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி

- 3010 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் mi.com மற்றும் அமேசான் இணையதளங்களில் அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது. அதன்படி முதல் விற்பனை ஆகஸ்டு 16-ம் தேதி முதல் Mi ஹோம் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு வவுச்சர்கள் வடிவில் ரூ.2200 வரை உடனடி கேஷ்பேக் மற்றும் 4500 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Xiaomi A2 Smartphone Redmi A2 Smartphone MI A2 சியோமி ஏ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments