இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்

டெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிளாக் மற்றும் அர்பன் புளு ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் இணையதளம் மற்றும் ஃப்ளிப்கார்ட் இணையதளங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இதன் விலை ரூ.29,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) சிறப்பம்சங்கள்

– 10.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே

ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்

– 3 ஜிபி ரேம்

– 32 ஜிபி இன்டெர்னல் மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம்

– 8 எம்பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 5 எம்பி செல்ஃபி கேமரா

– 4 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ் சவுன்ட் சிஸ்டம்

– 4ஜி எல்டிஇ, வைஃபை, வைபை டைரக்ட்

ப்ளூடூத், யுஎஸ்பி 2.0 டைப்-சி

– 7,300 எம்ஏஹெச் பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 2018 வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ரூ.2750 கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகிறது. இதனை பெற பயனர்கள் ரூ.198 அல்லது ரூ.299 சலுகைகளை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இத்துடன் அடுத்த நான்கு ரீசார்ஜ்களுக்கு டபுள் டேட்டா சலுகைகளும் வழங்கப்படுகிறது.

samsung galaxy tab a 2018 Samsung galaxy Samsung tab Samsung smartphone சாம்சங் கேலக்ஸி டேப் ஏ (2018) சாம்சங் ஸ்மார்ட்போன்
தொழில்நுட்பம்

Leave a comment

Comments