லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது

லண்டன்: மழை காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலே கைவிடப்பட்டது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணியும், ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்தும் வென்றன. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த போட்டியில் விராட் கோலியை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியில் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இங்கிலாந்து பந்துவீச்சை முறியடித்து இந்திய அணி இப்போட்டியில் வெற்றி பெறும் என்று இந்திய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலே கைவிடப்பட்டது.

INDvENG Team India 2nd Test Cricket Match Lords stadium இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி டெஸ்ட் கிரிக்கெட்
விளையாட்டு

Leave a comment

Comments