5-வது டெஸ்ட் போட்டி: லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதம் வீண் – தொடரை வென்றது இங்கிலாந்து!

5-வது டெஸ்ட் போட்டி: லோகேஷ் ராகுல், ரிஷப் பண்ட் சதம் வீண் – தொடரை வென்றது இங்கிலாந்து!

ஓவல்: 5-வது டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது.

இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்களை இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

இதையடுத்து 5-ஆம் நாள் ஆட்டம் நேற்று தொடங்கியபோது நிலைத்து நின்று விளையாடி வந்த ரஹானே 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விஹாரி டக் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால், அடுத்து இணைந்த லோகேஷ் ராகுல் – ரிஷப் பண்ட் ஜோடி அசத்தலாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவருமே சதம் விளாசி இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினர்.

ஆனால், அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு மிச்சமிருந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். லோகேஷ் ராகுல் 149 ரன்களும், ரிஷப் பண்ட் 114 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 345 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதைத் தொடர்ந்து டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வென்றது. மேலும், இங்கிலாந்து வீரர் அலஸ்டர் குக் இந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இந்தியா இங்கிலாந்து 5-வது டெஸ்ட் போட்டி தொடரை வென்றது இங்கிலாந்து INDIA v ENGLAND 5th Test Match
விளையாட்டு

Leave a comment

Comments