இ.சி.ஜி பரிசோதனை செய்யும் வசதி கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம்

இ.சி.ஜி பரிசோதனை செய்யும் வசதி கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம்

டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழாவில் இ.சி.ஜி பரிசோதனை செய்யும் வசதி கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் புதிய அம்சங்களுடன், தலைசிறந்த வடிவமைப்பு கொண்ட புதிய வாட்ச் சீரிஸ் 4 அறிமுகம் செய்யப்பட்டது. உலகிலேயே முதன்முறையாக இ.சி.ஜி பரிசோதனை செய்யும் வசதி கொண்ட வாட்ச்சாக இது திகழ்கிறது. மேலும் புதிய எஸ்4 சிப்செட் இதில் பொருத்தப்பட்டுள்ளது.


இந்த புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட 30% பெரியதாகும். இதன் யூசர் இன்டர்ஃபேஸ் பெரிய திரையை முழுமையாக பயன்படுத்தும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை கொண்டு பயனர்கள் ஒருமுறை க்ளிக் செய்து வாட்ச்ஃபேஸ் சேர்க்கலாம். இதனால் வாட்ச் திரையில் பங்கு சந்தை விவரம், இதய துடிப்பு மற்றும் ஆக்டிவிட்டி உள்ளிட்ட விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், புதிய வாட்ச் மாடலின் டிஜிட்டல் கிரவுனில் இம்முறை ஹாப்டிக் ஃபீட்பேக் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்பீக்கர்கள் அழைப்புகள், சிரி மற்றும் வாக்கி-டாக்கி உள்ளிட்டவற்றை சிறப்பாக பயன்படுத்த ஏதுவாக 50% அதிக ஒலியை வழங்குகிறது. வாட்ச் பின்புறம் பிளாக் செராமிக் மற்றும் சஃபையர் க்ரிஸ்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.


ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 399 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் செல்லுலார்+ஜி.பி.எஸ். வேரியன்ட் விலை 499 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.35,875) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 கோல்டு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் சில்வர், ஸ்பேஸ் பிளாக் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஆகிய மாடல்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 முதற்கட்டமாக 16 நாடுகளில் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இவற்றின் முன்பதிவு நாளை முதல் (செப்டம்பர் 14)  தொடங்குகிறது. விற்பனை செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்குகிறது. 

Apple iphone xs iphone xs max apple watch 4 series ஆப்பிள் வாட்ச் அறிமுகம் ஐபோன் Xs
தொழில்நுட்பம்

Leave a comment

Comments