திருப்பதி பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருப்பதி பிரம்மோற்சவம் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

புரட்டாசி மாதத்தில் வெகு விமரிசையாக நடைபெறும் பிரம்மோற்சவ விழா இன்று செப்.13ம் தேதி மாலை 4 மணி முதல் மாலை 4.40 மணிக்குள் மகர லக்ணத்தில் மஞ்சள் நிற கொடியில் கருட உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.


இன்று தொடங்கிய இந்த பிரம்மோற்சவ விழா வரும் செப்.21ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவமூர்த்தி எழுந்தருளி பல்வேரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.


இன்று செப்.13 இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதி உலா

செப்.14ம் தேதி காலை 5 மணிக்கு சிறிய சேஷ வாகன வீதியுலா; இரவு 7 மணிக்கு ஹம்ச (அன்னப்பறவை) வீதியுலா

செப்.15ம் தேது காலை 9 மணிக்கு சிம்ம வாகன வீதியுலா; இரவு 7 மணிக்கு முத்துப்பந்தல் நிகழ்ச்சி

செப்.16ம் தேதி காலை 6 மணிக்கு கற்ப வீருட்ச வாகன வீதியுலா; இரவு 9 மணிக்கு சர்வ பூபால வாகன வீதியுலா

செப்.17ம் தேதி காலை 9 மணிக்கு மோகினி அவதாரத்தில் பல்லக்கு வாகன வீதியுலா; இரவு 8 மணிக்கு கருட சேவை

செப்.18ம் தேதி காலை 9 மணிக்கு அனுமன் வாகன் வீதியுலா; மாலை 5 மணியளவில் தங்கத் தேரோட்டம்; இரவு யானை வாகன வீதிஉலா,

செப்.19ம் தேதி காலை 9 மணிக்கு  சூர்ய பிரபை வாகன வீதி உலா; இரவு 7 மணிக்கு சந்திர பிரபை வாகன வீதி உலா

செப்.20ம் தேதி காலை 7 மணிக்கு தேரோட்டம்; இரவு 7 மணிக்கு குதிரை வாகன வீதி உலா

செப்.21ம் தேதி காலை 7 மணிக்கு சக்கர ஸ்நானம், இரவு 7 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு.

இதைத் தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவம் வரும் அக்.10ம் தேதி தொடங்கி அக்.18ம் தேதி வரை நடைபெறுகிறது. திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருப்பதி கோயில் திருப்பதி ஏழுமலையான் திருப்பதி பிரம்மோற்சவ விழா திருப்பதி தேவஸ்தானம் பக்தர்கள் வழிபாடு ஆன்மிகம் Tirupati Tirupati Tirumala Temple Tirupati Brahmotsavam Brahmotsavam Festival Venkateswara temple Venkatesa Devotees Tirupati Devastanam
ஆன்மிகம்

Leave a comment

Comments