ஆப்பிள் ரசிகர்கள் கொண்டாட்டம்...புதிய ஐபோன் மாடல்கள், புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம்

ஆப்பிள் ரசிகர்கள் கொண்டாட்டம்...புதிய ஐபோன் மாடல்கள், புதிய ஆப்பிள் வாட்ச் அறிமுகம்

டெல்லி: புதிய ஐபோன் மாடல்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் ஆகியவற்றை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் 5.8 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் Xs ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் Xs மேக்ஸ் ஸ்மார்ட்போன் மற்றும் 6.1 இன்ச் டிஸ்பிளே கொண்ட ஐபோன் XR ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும், புதிய ஐபோன் Xs மாடலில் ஆப்பிள் வரலாற்றில் முதல் முறையாக டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் முன்பதிவு செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் செய்யப்படுகிறது. மேலும், இதன் விற்பனை செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. ஆப்பிள் வாட்ச் 4 சீரிஸ் டூயல் கோர் 64 பிட் புதிய எஸ்4 சிப்செட் கொண்டுள்ளது. இது  இருமடங்கு வேகமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் 4 கொண்டு பயனர்கள் தங்களது உடலில் 30 விநாடிகளில் இ.சி.ஜி. பரிசோதனையை செய்து கொள்ள முடியும்.

Apple iphone xs iphone xs max apple watch 4 series ஆப்பிள் வாட்ச் அறிமுகம் ஐபோன் Xs
தொழில்நுட்பம்

Leave a comment

Comments