புதிய ஆப்பிள் ஐபோன் XS, ஐபோன் XS Max மற்றும் ஐபோன் XR ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

புதிய ஆப்பிள் ஐபோன் XS, ஐபோன் XS Max மற்றும் ஐபோன் XR ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

டெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக ஆப்பிள் பொருட்களின் ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR என அழைக்கப்படும் மூன்று புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிய ஐபோன்களில் முதல் முறையாக டூயல் சிம் சப்போர்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஐபோன் ஆப்பிள் ஏ12 பயோனிக் 7என்.எம். சிப்செட் மூலம் இயங்குகிறது. இது முந்தைய ஏ11 பிராசஸரை விட 15% வேகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6-கோர் சி.பி.யு. கொண்ட புதிய சிப்செட் 40% குறைந்த மின்சக்தியை பயன்படுத்துகிறது. இதன் காரணமாக ஐபோனின் பேட்டரி பேக்கப் முந்தைய மாடல்களை விட அதிக நேரம் நீடிக்கும். புதிய ஐபோன் XS மாடலில் உள்ள ஃபேஸ் ஐடி அம்சம் முந்தைய தொழில்நுட்பத்தை விட வேகமாகவும், அதிக பாதுகாப்பாகவும் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் சிறப்பம்சங்கள்:

- ஐபோன் XS: 5.8-இன்ச் 2436x1125 பிக்சல் OLED 458ppi சூப்பர் ரெட்டினா HDR டிஸ்ப்ளே, 3D டச்

- ஐபோன் XS மேக்ஸ்: 6.5-இன்ச் 2688x1245 பிக்சல் OLED 458ppi சூப்பர் Retina HDR டிஸ்ப்ளே, 3D டச்

- 6-கோர், 12 பயோனிக் 64-பிட் 7என்.எம். பிராசஸர் 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்

- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்

- ஐ.ஓ.எஸ். 12

- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)

- டூயல் சிம் (இரண்டாவது இசிம் தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்க் மட்டும் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)

- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8

- 12 எம்பி டெலிஃபோட்டோ இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4, டூயல் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்

- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்

- ட்ரூ டெப்த் கேமரா

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்

- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்

- ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆப்பிள் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் ஸ்மார்ட்போன் கோல்டு, சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஐபோன் XS விலை 999 டாலர்கள் என்றும், ஐபோன் XS மேக்ஸ் விலை 1,099 டாலர்கள் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் XS சீரிஸ் முதற்கட்டமாக 30 நாடுகளில் கிடைக்கும். இவற்றுக்கான முன்பதிவு நாளை முதல் (செப்டம்பர் 14) தொடங்கி செப்டம்பர் 21-ம் தேதி விற்பனை நடைபெறுகிறது. இந்தியாவில் இவற்றின் விலை முறையே ரூ.99,990 மற்றும் ரூ.1,09,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் XR சிறப்பம்சங்கள்:

- 6.1 இன்ச் 1792x828  பிக்சல் எல்.சி.டி. 326ppi லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே, 3D டச்

- 6-கோர் ஏ12 பயோனிக் 64 பிட் 7 என்.எம். பிராசஸர், 4-கோர் GPU, M12 மோஷன் கோ-பிராசஸர்

- 64 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி ஆப்ஷன்கள்

- ஐ.ஓ.எஸ். 12

- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (IP68)

- டூயல் சிம் (நானோ+இரண்டாவது இசிம் அல்லது சீனாவில் பிரத்யேக சிம் ஸ்லாட்)

- 12 எம்பி வைடு-ஆங்கிள் பிரைமரி கேமரா, f/1.8, ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன், ட்ரூ டோன் ஃபிளாஷ்

- 7 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2, ரெட்டினா ஃபிளாஷ்

- ட்ரூ டெப்த் கேமரா

- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்

- பில்ட்-இன் லித்தியம் அயன் பேட்டரி, க்யூ.ஐ. வயர்லெஸ் சார்ஜிங்

- ஃபாஸ்ட் சார்ஜிங்

ஆப்பிள் ஐபோன் XR மாடல் வைட், பிளாக், புளு, எல்லோ, கோரல் மற்றும் ரெட் ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை 749 டாலர்கள் ஆகும். வருகிற அக்டோபர் 19-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு செய்யப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அக்டோபர் 26-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படுகிறது.

Apple iphone xs iphone xs max apple watch 4 series ஆப்பிள் வாட்ச் அறிமுகம் ஐபோன் Xs
தொழில்நுட்பம்

Leave a comment

Comments