திருமண அழைப்பிதழை சிஎஸ்கே டிக்கெட் போன்று வடிவமைத்த தோனியின் தீவிர ரசிகர் - புகைப்படம் உள்ளே

திருமண அழைப்பிதழை சிஎஸ்கே டிக்கெட் போன்று வடிவமைத்த தோனியின் தீவிர ரசிகர் - புகைப்படம் உள்ளே

சென்னை: தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை சிஎஸ்கே டிக்கெட் போன்று வடிவமைத்துள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. அப்போது முதல் தோனிக்கும், அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உலகளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் தோனியின் தீவிர ரசிகரான வினோத் என்பவர் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை சிஎஸ்கே டிக்கெட் போன்று வடிவமைத்துள்ளார். இதன் புகைப்படம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வினோத் கூறுகையில், ‘‘தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகரான நான் எனது திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் அச்சிட விரும்பினேன். இது பற்றி கிராபிக் டிசைனரான எனது நண்பரிடம் பேசினேன். அவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் தான். இருவரும் இணைந்து இந்த அழைப்பிதழை வடிவமைத்தோம்’’ என்றார்.

திருமண அழைப்பிதழ் சிஎஸ்கே டிக்கெட் தோனியின் தீவிர ரசிகர் சென்னை சூப்பர் கிங்ஸ் Marriage Invitation CSK Ticket Dhoni Fan
விளையாட்டு

Leave a comment

Comments