திருப்பதி பிரம்மோற்சவ விழா : ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருப்பதி பிரம்மோற்சவ விழா : ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதிக்கு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் சந்திரபாபு நாயுடு.

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது .இதனைஅடுத்து பிரம்மோற்சவத்தின் முதல் நாள் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன்,பேடி ஆஞ்சநேய சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு பட்டு வஸ்திரங்களை தலையில் வைத்தபடி எடுத்து வந்து சுவாமிக்கு சமர்ப்பித்தார்.

அதனையடுத்து பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்று இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நாளான 17-ம் தேதி கருட சேவையும், 18-ம் தேதி மாலையில் தங்க ரத ஊர்வலமும், 20-ம் தேதி காலை தேர்த் திருவிழாவும், 21-ம் தேதி காலை சக்கர ஸ்நான நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.பிரமோற்சவ விழாவினை முன்னிட்டு திருமலையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்,பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகள் முதலியவற்றை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மிகவும் சிறப்பாக  ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு வரும் 21-ம் தேதி வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவைகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.வருகின்ற 17-ம் தேதி கருட சேவையன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு இரு சக்கர வாகன போக்குவரத்து,ரத்து செய்ய பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரி அனில்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.திருப்பதி திருமலை பிரம்மோற்சவ விழா கருட சேவை பட்டு வஸ்திரங்கள் சந்திரபாபு நாயுடு திருமலை திருப்பதி தேவஸ்தானம் Tirupati Tirumala Brahmotsavam festival Garuda sevai
ஆன்மிகம்

Leave a comment

Comments