ஆரோக்கியமான இதயம் வேண்டுமா? அப்ப இதை செய்யுங்கள்

ஆரோக்கியமான இதயம் வேண்டுமா? அப்ப இதை செய்யுங்கள்

நமது உடலை எந்த நோய் தாக்கமும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்கவே அனைவரும் விரும்புகிறோம். அதற்காக நாம் எவ்வளவோ சிரமம்பட வேண்டியதுள்ளது. உதாரணத்திற்குக் காலையில் எழுந்ததும், உடற் பயிற்சி, யோகா, சுடு தண்ணீர், பழச்சாறுகள் குடிப்பது என ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல முயற்சிகளை எடுக்கிறோம். தினமும் வெறும் 5 நிமிடம் இதை செய்து பாருங்கள் இதய பிரச்சனை முதல் கால் வீக்கம் வரை சீராகும்.

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுவருக்கு அருகில் ஒரு துணியை விரித்து சுவரை பார்த்தாற் போல் 
எதிர்  திசையில் படுங்கள். பின் கால்களை நேரடியாக உயர்த்தி சுவரின் மேற்பரப்பில் சமமாக வையுங்கள். அதாவது உங்களது உடல் பார்ப்பதற்கு 'L' வடிவில் சரியாக 90% டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும்.

காலை நிலையில் சுமார் 5 நிமிடங்களுக்கு நீடிக்க வேண்டும். இந்தக் கால வேளையில் கண்களை மூடிக் கொண்டு மூச்சை நன்கு உள்ளிழுத்து பொறுமையாக வெளியிட வேண்டும். தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சமமாக பாய்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

பயன்கள்:

* இதயத் துடிப்பை சீர்ப்படுத்தி எந்தக் கோளாறும் இல்லாமல் இதயத்தைச் செயல்பட வைக்கும்.

* கால்களை உயத்துவதன் மூலம் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் குடல்களில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதைச் சரி செய்து அதன் செயல்பாட்டை சரி செய்யும்.

* கால்களில் ஏதேனும் வீக்கம் இருந்தால் ரத்தம் சீராக பாய்வதன் மூலம் அதன் செயல்பாட்டை சரி செய்யும்.

* இதனால் ரத்தம் உடல் முழுவதும் சீராக பாய்வதால் ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

சுவர் இருப்பதால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதற்கேற்ப தினமும் ஒரு 5 நிமிடத்தை உடல் நலத்திற்காக ஒதுக்கி  இந்த பயிற்சியை செய்து பயன் பெருங்கள்.


உடற்பயிற்சி இதயம் கால் வலி ரத்த ஓட்டம் Heartbeat Heart legpain Physical fitness Gym lifestyle
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments