உடலுக்கு குதிரை பலம் தரும் சித்தர்களின் மூலிகைகள்

உடலுக்கு குதிரை பலம் தரும் சித்தர்களின் மூலிகைகள்

உடல் பலம் தரும் மூலிகை: நோய்வரின் நோய்நாடி, அதுதணிக்கும் வாய் நாடிச் செய்வது சித்த மருத்துவத்தின் சிறப்பு ஆகும்.உணவே மருந்து, மருந்தே உணவு, தாவரங்களும் உயிரினங்களும் உலோகங்களும் அதாவது பஞ்ச பூதங்கள் எல்லாம் மனித நலன்களுக்காகப் பயன்படுமாற்றல் உள்ளவை என்பது  சித்த மருத்துவத்தின் கோட்பாடுகள் ஆகும்.

சித்தர்கள் கூறிய மருந்துகள் அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகின்றது. இதனால் அடிக்கடி வரும் சில உடல் உபாதைகளில் இருந்து நாம் தப்பிக்க முடியும். இந்த மூலிகைகள் குறிப்பிட்ட சில உறுப்புகளுக்கு மட்டும் பயனை கொடுப்பதில்லை.முழு உடலுக்கும் தேவையான சக்தியை கொடுக்கிறது.இந்த மூலிகைகள் அனைத்தும் உடலில் இருக்கும் மன அழுத்தத்தை தரும் ஹார்மோன்களை சரி செய்து உங்களின் மன அழுத்தத்தை போக்குகிறது. 

நீங்கள் மிகவும்  சோர்வாகவும், மன அழுத்தத்துடன் இருப்பவராக இருந்தால் கீழ்க்கண்ட சூரணத்தை தினமும் சாப்பிட்டு வர மனஅழுத்தம் நீங்குவதுடன்.உடல் பலம் பெரும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.


1.நிலபனங்கிழங்கு. 

2.தண்ணீர் விட்டான் கிழங்கு. 

3.இலவம் பிசின். 

4.நெருஞ்சில் விதை.

5.நீர்முள்ளி விதை.

6.பெரும் பூனைக்காலி விதை.

7.பனங்கற்கண்டு.
மேற்கண்ட ஏழு பொருட்களையும் சம பங்கு எடுத்து சூரணம் செய்து கொள்ளவும்.இதில் இரண்டு ஸ்பூன் அளவு தினமும் எடுத்து 200 மில்லி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவு தூங்குவதற்கு முன், சாப்பிட்ட பிறகு  நாற்பது நாட்கள் குடித்துவந்தால் உடல் பலம் பெரும்.மேலும் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைத்து உடல் மெருகேறும்,மேலும் உடல் பொன்னிறமாக மாறும் என்றும் சித்தர்கள் பல்வேறு கிரந்தங்களில் தெரிவித்துள்ளனர்.மேற்கண்ட அனைத்து மருந்துகளும் அருகில் உள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். 


#உடல்பலம் #குதிரைபலம் #சித்தர்களின்மூலிகைகள் #உடலினைஉருதிசெய்யும்மூலிகை #Bodystrength #Stressreliefproducts #Siddhamedicine #HorsePower #horsepowermedicine

உடல் பலம் குதிரை பலம் சித்தர்களின் மூலிகைகள் உடலினை உருதிசெய்யும் மூலிகை Body strength Stress relief products Siddha medicine Horse Power
லைப்ஸ்டைல்

Leave a comment

Comments