‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தடை கோரி நடிகர் பிரசாந்தின் தாயார் மேல்முறையீடு

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தடை கோரி நடிகர் பிரசாந்தின் தாயார் மேல்முறையீடு

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு தடை கோரி நடிகர் பிரசாந்தின் தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கே.ஈ.ஞானவேராஜா தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இந்நிலையில், நடிகர் பிரசாந்தின் தாயார் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்படத்துக்கு தடை கோரி சிவில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், 2013ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘ஸ்பெஷல் 26’ படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னட உரிமத்தை நாங்கள் பெற்றுள்ளோம். எங்களிடம் அனுமதி பெறாமல் அந்த கதையை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை எடுத்துள்ளானர். ஆகையால் இப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ஆர்.பி.பி நிறுவனத்திடம் இருந்து உரிமம் பெற்றதாக கூறினார். இதையடுத்து, படத்துக்கு தடை இல்லை என கூறி இவ்வழக்கை முடித்து வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் பிரசாந்த் தாயார் தரப்பில் இவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

’தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.12ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தானா சேர்ந்த கூட்டம் சூர்யா பொங்கல் வெளியீடு தடை கோரி வழக்கு நடிகர் பிரசாந்த் விக்னேஷ் சிவன் ஞானவேல் ராஜா Thaana Serndha Koottam TSK TSK From Pongal Pongal Release Gnanavel Raja Prashanth Mother Chennai High Court
சினிமா

Leave a comment

Comments